×

ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

கண்டமங்கலம், ஜன. 19:    புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கொடாத்தூர் மணவெளி   ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த செல்வம் (40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தன் மகனுடன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் முட்ராம்பட்டு ஏரியில் மீன் பிடித்துள்ளார். அப்போது ஏரியில் இறங்கி மீன் பிடித்தவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் இதுகுறித்து தாய் மற்றும் உறவினரிடம் கூறினான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வானூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி குமார் தலைமையிலான வீரர்கள் வந்து ஏரியில் இருந்து செல்வத்தின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து கண்டமங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்வம் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : lake ,
× RELATED விஷம் குடித்து தொழிலாளி பலி