×

குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு

தஞ்சை, ஜன.19: வேளாண் பொறியியல்துறைக்கு சொந்தமான டயர் வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளன. டயர் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகையாக ரூ.875ம், பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகையாக ரூ.1415ம் என குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் டிராக்டருடன் கூடிய கருவிகளான கொக்கிக் கலப்பை, சட்டிக் கலப்பை, ரொட்டவேட்டர், வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி மற்றும் வைக்கோல் கட்டும் கருவி மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விடப்படுகிறது. விவசாய கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த கோட்ட அலுவலகத்தில் வாடகை முன்பணம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். தஞ்சை கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல்துறை எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிப்பட்டி சாலை, தஞ்சை என்ற முகவரியிலும், கும்பகோணம் கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல்துறை, தொழில்பேட்டை அருகில், கும்பகோணம் என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை கோட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியில்துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை என்ற முகவரியிலும் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு