×

புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா

புதுச்சேரி,  ஜன. 19: புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் சட்டசபை கூட்டத்தில்  பங்கேற்கவில்லை.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் லட்சுமிநாராயணன். முதல்வரின் பாராளுமன்ற செயலரான இவருக்கு தற்போது கொரோனா  தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, எம்எல்ஏக்கள் ெஜயபால், அனந்தராமன்  பாஸ்கர், சிவா, வெங்கடேசன், ஜெயமூர்த்தி ஆகியோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கடந்த 2  மாதமாக எந்த எம்எல்ஏக்களும் பாதிக்கப்படாத நிலையில் தற்போது காங்கிரஸ்  எம்எல்ஏ லட்சுமிநாராயணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சட்டசபை  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.Tags : Corona ,Puducherry Congress MLA ,
× RELATED மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா