×

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர்கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, எஸ்பி கண்ணன், ஏஎஸ்பி சுந்தரவதனம், ஏடிஎஸ்பி பொன்ராம் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அதிரடிப்படை போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை வரவழைக்கப்பட்டன. பின்னர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து,  ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகையில் இன்ஸ்பெக்டர்கள் திருக்கழுக்குன்றம் முனிசேகர், தாழம்பூர் கோவிந்தராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் திடீர் கலவர தடுப்பு பாதுகாப்பு நிகழ்ச்சியை கண்ட பொதுமக்கள், உண்மையிலேயே தடியடி நடக்கிறது என அதிர்ச்சியடைந்தனர்.  பின்னர் போலீசார் கூறுகையில், அடிக்கடி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இதனை தடுக்கும்போது போலீசாருடன், போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடத்தினோம் என்றனர்.

Tags : Riot prevention security rehearsal ,incident ,Mamallapuram ,Pooncherry road ,
× RELATED மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி...