மக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரம் மேட்டுத் தெரு தர்மராஜா கோயில் பகுதியில்  மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. நகர திமுக செயலாளர்  ச.நரேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.ராஜி, தனசேகர், முனுசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை பேச்சாளர்  சேலம் சரோஜா  ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், செங்கல்பட்டு நகருக்கு கடந்த 4 ஆண்டுகளில்,  எம்எல்ஏ நிதியில் இருந்து இதுவரை ₹3.5 கோடி ஒதுக்கி சாலை மற்றும் குடிநீர் வசதி, கல்வெட்டு ஆகிய பணிகள் நிறைவேற்றியுள்ளேன். செங்கல்பட்டு நகரின் நீண்டநாள் பிரச்னையான பாதாள சாக்கடை திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்.

அதிமுக ஆட்சியில், செங்கல்பட்டு தொகுதியில் பல்வவேறு திட்டங்களை நிறைவேற்றாமல் விட்டுவிட்டனர். மக்கள் சபை கூட்டத்தில் நீங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள், இன்னும் 5 மாதத்தில் நிறைவேற்றப்படும். மக்கள் அதிமுகவை நிராகரித்து திமுகவை ஆதிரிக்கவேண்டும் என்றார்.  இதில், பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், ஆப்பூர் சந்தானம், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கலாவதி, மீரா சபாபதி,  இ.சிலம்புசெல்வன், சீனு, அல்தாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: