பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி, வெங்கலத்தில் 8 வீடுகளில் 14.62 லட்சம் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர்,ஜன.19:பெரம் பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டி மற்றும் வெங்கலம் ஆகிய 2 ஊர்களில், 8 வீடுகளில் . 35பவுன் நகைகள், 2.43 லட்சம் ரொக்கம் என ரூ14.62 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீட்டுப் பத்தி ரங்களை வயலில் வீசிச் சென்றனர. பெரம்பலூர் அருகே குரும் பலூர் பேரூராட்சிக்கு உட் பட்ட ஈச்சம்பட்டி கிராமத் தில் சஞ்சய் காந்தி தெருவில் வசிப்பவர் நூர் முகம்மது மகன் அபுபக்கர்(60). இவருக்கும் இன்ஜினீயரான இவரது தம்பி ஜலீல்(55) என்பவருக்கும் ஊரிலுள்ள மெயின்ரோட்டில் சொந்த வீடுகள் உள்ளன. இதில் ஜலீல் தனதுவீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, பெரம்பலூரில் குடியிருந்து வருகிறார். ஓராண்டுக்கு முன்பு நூர்முகமது இறந்த நினைவு நாளையொட்டி நேற்று முன்தினம் அதே ஊரின் எல்லையில் உள்ள அவர்களது புதுவீட்டில் சடங்குகள் செய்ய குடும்பத்தாருடன் புதுவீட்டில் தங்கியிரு ந்தார்.

இதனை அறிந்த கொள்ளையர்கள் அபுபக்கர் வீட்டின் பூட்டைஉடைத்து, உள்ளே நுழைந்து, பணம் நகைகள் வைத்திருந்த பெட்டி ஒன்றை அலேக்காகத் தூக்கிச் சென்று, அருகி லுள்ள வயல் பகுதியில் வைத்து உடைத்துத் திறந்து பார்த்துள்ளனர். அந்தப் பெட்டியில் அபுபக்கர் வைத் திருந்த 28 பவுன் நகைகள், ரூ62ஆயிரம் ரொக்கப்பண ம் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள், அதே பெட்டியில் இருந்த பல கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திர ங்கள், வங்கி பாஸ்புத்தகங் கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு சென் று விட்டனர்.

காலையில் அப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள், திறந்து கிடந்த பெட்டியில் வீட்டு பத்திரங்கள் இருப்ப தை ஊருக்குள் தெரிவித்த பிறகே அபுபக்கர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவமே தெரிய வந்தது.பின்னர் அபுபக்கர் தனதுவீட்டிற்குச் சென்றுபார்த்தபோது தான் சேமித்து வைத்திருந்த 28 பவுன் நகைகள், ரூ62,000 ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம் பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத் தினர்.அப்போது அபுபக்கர் வீட்டின் அருகே குப்புசாமி என்ற பள்ளி ஆசிரியரது வீட்டு ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொள்ளையர் கள் திருடமுயன்றதும், அபூபக்கரின் தம்பி ஜலீல் வாடகைக்கு விட்டு இருந்த வீட்டிலும் கொள்ளைமுயற்சி நடந்ததும் தெரியவந்தது. காவல்துறையின் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு, தடயங்கள் சேக ரிக்கப்பட்டன.போலீசாரின் மோப்பநாய் வந்து கொள்ளையர் பணப் பெட்டியை தூக்கிச்சென்ற வழித்தடங்களில் பயணித்து வயலில் நின்று விட்டு திரும்பியது. சம்பவம் குறித்து பெரம்ப லூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெங்கலத்தில்.... பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் கிராமத்தில் நேற்று முன் தினம் 5வீடுகளில் கொள்ளையர் கள் கைவரிசை காட்டியது மேலும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. வெங்கலம் மேற்குத் தெருவை சேர்ந்த வர் ராமர்(56).அருகே வசிப்பவர் துரைராஜ் டிரைவர் மனை வி ஜெயலட்சுமி(45). வெங்கலம் வடக்குதெருவைச் சேர்ந்த ராஜா என்கிற ராஜேந்திரன்(35). அருகே வசிப்பவர் ஜெயகாந் தம்(55).இந்நிலையில் நேற் று முன்தினம் வெங்கலம் கிராமத்தில் புகுந்த கொள்ளையர்கள் ஜெயலட்சுமி வீட்டில் 5பவுன் நகைகள், 10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், ராஜேந்திரன் வீட்டில் 1.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 பவுன் நகை, ஒரு மொபட் ஆகியவற் றையும், ராமர்வீட்டில் 1 பவுன்நகை, ரூ15ஆயிரம்ரொக்கம் ஆகியவற்றையும் கொ ள்ளையடித்து சென் றுள்ளனர். ஜெயகாந்தம் மற்றும் ஒருவர் என இருவர் வீட்டில் கொள்ளை முய ற்சி நடந்துள்ளது. இதன்படி வெங்கலம் கிராமத்தில் மட் டும் 7பவுன் நகைகள், 1.75 லட்சம் ரொக்கம் ஆகியன திருடு போயுள்ளன.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் வெங்கலம் கிராமத்திற்குச் சென்று, கொள்ளை நடந்த வீடுகளில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசாரின் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்றவழித்தடங்கள் கண் டறியப் பட்டன. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதன்படி பெரம்பலூர் மாவ ட்டத்தில் ஈச்சம்பட்டி மற்றும் வெங்கலம் ஆகிய 2 கிராமங்களில் 35பவுன்நகைகளு ம், ரூ2.37 லட்சம் ரொக்கப் பணமும் எனமொத்தத்தில் ரூ14.62 லட்சம் மதிப்பில் வருடத்தின் முதல் மாதத்தி லேயே திருடுபோனது பெரம்பலூர் மாவட்ட மக்களிடையேபெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: