×

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கு 147 பள்ளிகள் திறப்பு

பெரம்பலூர்,ஜன.19: கொரோனா தடையால் திறக்கப் படாதிருந்த உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள். 10,12ம் வகுப்புகளுக்காக ஏழரை மாதங்களுக்குப் பிறகு இன்று 147 பள்ளிகள் திறக்கப்படுகிறது. . மாணவ, மாணவியர், ஆசி ரியர் உள்ளிட்ட 20ஆயிரம் பேர்களுக்கு 60ஆயிரம் மாஸ்க்குகள், சானிடைசர் தயார் நிலையில் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் தொ ற்றுப் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு 144 தடை உத்தரவு காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த ஆண்டு திறக்கப்படாமல் மூடிக்கிடந்தன பல்வேறு கட்ட தளர்வுகளுக்குப் பிற கு, தமிழகஅரசு தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மா ணவ, மாணவியர் நலன் கருதி இன்று(19ம்தேதி) முதல் உயர்நிலை மேல்நி லைப் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.தன்படி பெரம்பலூர் மாவ ட்டத்தில் 91அரசுபள்ளிகள், 7அரசு உதவிபெறும் பள்ளி கள், 45மெட்ரிக் மற்றும் சுய நிதிப் பள்ளிகள், 4 சிபிஎஸ் சி பள்ளிகள் என மொத்தம் 147உயர்நிலை,மேல்நிலை ப் பள்ளிகள் இன்று திறப்ப தற்குபள்ளிக்கல்வித்துறை சார்பாக நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. இதி ல் 10ம்வகுப்பைச் சேர்ந்த 4,501 மாணவர்கள், 3,995 மாணவிகள் எனமொத்தம் 8,496 பேர்களும், 12ம்வகுப் பைச் சேர்ந்த 3,947 மாண வர்கள், 4,072 மாணவிகள் எனமொத்தம் 8,019 பேர்க ளும் என 16,515மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரு கைதர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த 16,515 பேருக்கும் மறுமுறை உபயோகப் படுத்தக்கூடிய வகையில் தலா 3 மாஸ்க்குகள் என 49,545 மாஸ்க்குகளும், 147 உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், பணியாளர்கள் 5,500பேர் என சு மார் 60ஆயிரம் மாஸ்க்குகள், சானிடைசர்கள் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் சார்பாக பெறப்பட்டு 147 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 147 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் நேற் று தங்கள் பள்ளியிலுள்ள 10, 12ம் வகுப்புகளை சுத்தப் படுத்தி கிருமிநாசினி தெ ளிக்க ஏற்பாடு செய்துள்ள னர்.

இப்பணிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (தொட க்கக் கல்வி) பாஸ்கர சேதுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பேசியதா வது : அரசு உத்தரவுப் படி சமூக இடைவெளியை பின் பற்றுவகாக வகுப்பறை களில் பொதுத்தேர்வு மு றைப்படி டெஸ்கிற்கு இருவர் மட்டுமே அமரவைக்கப் படவேண்டும். மாணவ, மாணவியர் உள்ளே நுழையும் போதும்வெளியேசெல்லும் போதும் சானிடைசர் மூலம் கைகளைக் கழுவிக் கொள்ள ஏற்பாடுசெய்ய வேண் டும். மாணவ, மாணவியர் உணவுகளை ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொ ள்ளக்கூடாது. இதனை பள் ளித் தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள் துணை யுடன் முழுமையாக நடை முறைப் படுத்தவேண்டும் என்றார். ஆய்வின்போது பெரம்ப லூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவா ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (பெரம்ப லூர்) மாரி மீனாள், (வேப் பூர்) குழந்தைராஜன் ஆகி யோர் உடனிருந்தனர்.

Tags : schools ,classes ,district ,Perambalur ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...