கலெக்டர் துவக்கி வைத்தாஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் இணையதளம் வாயிலாக வந்த 47 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர், ஜன.19: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ரத்னா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் இணையதளத்தில் கூகுள் மீட் என்ற இணைப்பு மூலம் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் இணையவழி வசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்களின் மூலம் தங்களது கோரிக்கைகள் மனுக்கள் அளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நேற்று இணையவழி மூலம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 47 மனுக்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்த கலெக்டர் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலமும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டிஆர்ஓ., ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், துணை கலெக்டர் ஏழுமலை உள்ளிட்ட துறை அலுவலர்கள் இணையவழி வாயிலாக கலந்துகொண்டனர். பெரம்பலூர்: பெரம் பலூர் மாவட்டத்தில் 5இடங் களில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 59 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் உத்தரவின் படி, பொதுமக்கள் குறை தீர் க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வெங்கட பிரியா உத்தரவின்படி அ னைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று(18ம் தேதி)நடைபெற்றது.இந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவசதையல் இயந்திரம் கோருதல் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில் நேற்று காலை பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 2 மனுக்களும், குன் னம் மற்றும்ஆலத்தூர் தாலுகா அலுவலகங்களில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் தலா 1 மனுவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைத்தீர்க் கும் நாளுக்காக வைக்கப் பட்டுள்ள தனிப்பெட்டியில் 43மனுக்களும் என பெரம்ப லூர் மாவட்டத்தில் மொ த்தம் 59மனுக்கள் பெறப்ப ட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெ றப்பட்ட மனுக்கள் முறை யாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் ரசீது மனுதாரர்களுக்கு வழங்க ப்பட்டது. பெறப்பட்ட மனுக் கள் தகுதி வாய்ந்த மனுக் களா என விசாரணை மேற் கொண்டு மனுதாரர்களுக் குக் காலதாமதம் இன்றி வி ரைந்து நடவடிக்கை மேற் கொண்டு 15நாட்களுக்குள் பதிலளிக்குமாறு, துறை அ லுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது.

Related Stories: