28ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் வழியாக பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கரூர், ஜன. 19: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை குளித்தலை உழவர் உற்பத்தியாளர் குழுவினர் நேற்று மாயனூர் முதல் தாயனூர் வரையில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன பகுதிகளை டெல்டாவாக அறிவிக்க வேண்டும், நடப்பு சம்பா நெல் சாகுபடியில் இயற்கை பாதிப்பினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மனு கொடுக்க வந்தனர். இதே போல், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதியில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், மரவள்ளி, உளுந்து, சோளம், எள் போன்ற் பயிர்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நஷ்டத்தை கவனத்தில் கொண்டு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் மனு கொடுக்க வந்தனர்.

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்ற போது, அவர்களை தடுத்த அதிகாரிகள், குறிப்பிட்ட சிலர் தான் உள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தனர். முக்கிய பிரச்னை குறித்து பேசக் கூட உள்ளே செல்ல அனுமதியில்லையா? என ஆத்திரமடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குளித்தலை பகுதியை டெல்டாவுடன் இணைக்க வேண்டும். ஒரு ஏக்கர் பயிரிட ரூ. 50ஆயிரம் வரை செலவிடப்பட்டுள்ளது எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த டிஆர்ஓ ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அனைவரும் வலியுறுத்தினர். தொடர்ந்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>