டெல்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன். ஓய்வு அறிவித்த நிலையில் மீண்டும் விளையாட இருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்தார். தன் பயணத்தை புரிந்துகொள்ள நான் நேரம் எடுத்துக் கொண்டதாகவும் வினேஷ் போகத் பதிவிட்டார். நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும் என் மனதில் விளையாட்டுத் தீ அணையவில்லை என வினேஷ் போகத் உருக்கம்.
