சப்.கலெக்டர் ஆய்வு தோகைமலை அருகே சேங்கலில் துவரை சாகுபடிக்கான வயல்வெளி தினவிழா

தோகைமலை, ஜன 19: தோகைமலை அருகே புழுதோியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக துவரை சாகுபடியில் வயல்வெளி ஆய்வின் வயல்வெளி தின விழா சேங்கல் கிராமத்தில் நடந்தது. கரூர் மாவட்டத்தில் சுமார் 3,242 எக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் துவரை சாகுபடி மானாவாரியாக பயிரிடப்படுகிறது. சேங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துவரைக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இந்த ஆண்டு சேங்கல், மற்றும் போத்துராவுத்தன்பட்டி கிராமங்களில் 25 ஏக்காில் பகுதி அளவிலான செயல்விளக்கம் துவரை சாகுபடியில் செயல் படுத்தப்பட்டு உள்ளது. செயல் விளக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு துவரை விதையான (கோ8), உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ், டிரைக்கோடொமா விரிடி மற்றும் பயறு ஒன்டா வழங்கப்பட்டது.

பூச்சி மற்றும் நோயினை கட்டுப்படுத்த விளக்கு பொறி, மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி, பூச்சிவிரட்டி மற்றும் வறட்சியை தாங்கக்கூடிய மெத்தைலோ பாக்டீரியா ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வயல்வெளி தினவிழாவில் தொழில்நுட்ப வல்லுநா–்கள் கவியரசு, மாரிக்கண்ணு, திட்ட உதவியாளா் தொழில்நுட்பம் கருப்பசாமி ஆகியோர் துவரை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் நுட்பங்களை விளக்கி கூறினர். இதில் விவசாயிகள் கூறுகையில், உயிர் உரங்கள் பயன்படுத்தியதன் மூலம் செயற்கை உரங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. விளக்குப்பொறி பயன்படுத்தியதன் மூலம் புள்ளி காய்ப்புழு மற்றும் இலை பிணைப்புப்புழு தாக்குதல் குறைந்துள்ளது. மேலும் பயறு ஒன்டா பயன்படுத்தியதன் மூலம் பூக்கள் உதிர்வது குறைந்து காய்பிடிப்புத்திறன் அதிகாித்துள்ளது என்றனர். வயல்வெளி தினவிழாவில் முன்னோடி துவரை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: