தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு

லால்குடி, ஜன. 17: லால்குடி ஒன்றியம் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவையென பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள், எம்எல்ஏ சவுந்தரபாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து 2018- 2019ம் ஆண்டுக்கான லால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.14.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கி முடிந்தது. இதையொட்டி கட்டிட திறப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றார். லால்குடி ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் துரை மாணிக்கம் முன்னிலை வகித்தனர். கட்டிடத்தை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பேசினார். மாவட்ட கவுன்சிலர் ஆதிநாயகி ரவி, மாவட்ட பிரதிநிதி குழந்தை, திருமங்கலம் ஊராட்சி தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் பிச்சைமணி, கிளை செயலாளர் ராஜ்குமார், ஊராட்சி துணைத்தலைவர் செட்டியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் ஜெரால்டு ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

Related Stories: