×

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை

திருவெறும்பூர், ஜன. 17: திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடி, அசூர், தேனீர்பட்டி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனங்குடி, நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகிய கிராமங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதையடுத்து நெற்பயிர் சேதமடைந்த வயல்களை திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையி–்ட்டார். அப்போது விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. எனவே அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத்தொகை ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நவல்பட்டு சண்முகம், கும்பக்குடி கங்காதரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கண்மாய் நீர்வரத்து ஓடையானது...