×

அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

திருச்சி, ஜன. 17: திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மெயின்ரோடு அருகே உள்ள ரேஷன் கடை வாசலில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து செங்குளம் காலனி விஏஓ அனீஸ்பாத்திமா கொடுத்த தகவலின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ