மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பொங்கு சனீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்துறைப்பூண்டி, ஜன.17: திருத்துறைப்பூண்டி அருகே கீராலத்தூர் ஊராட்சியில் உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி விழா கடந்த மாதம் 27ம் சனிஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனிப்பெயர்ச்சி முடிந்து மூன்று சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வது வாழ்க்கையில் நன்மை தரும் என்பதால் கடந்த 2ம் தேதி முதல் சனிக்கிழமையும், 9ம் தேதி இரண்டாவது சனிக்கிழைமைகளில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். நேற்று மூன்றாவது சனிக்கிழமை என்பதால் காலை முதல் இரவு வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். இதில் செயல் அலுவலர் சுரேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>