×

கனமழையால் சேதமடைந்த சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன. 17: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்லாயிரக்கனான ஏக்கர்களில் சாகு படி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கதிர் விட்ட நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி சேதமடைந்த சம்பா பயிர்களை எம்எல்ஏ டிஆர்பி ராஜா நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர், எம்எல்ஏ டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளது வேதனையளிக்கிறது. அனைத்து தரப்பு விவசாயிகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாதது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட வயல்களில் கள ஆய்வு மேற்கொள்ளப் படவில்லை. பயிர் காப்பீடு வழங்க கணக்கெடுக்க வந்த இன்சுரன்ஸ் அதிகாரிகள் பெய ரளவிற்கு கணக்கெடுத்து சென்றுள்ளனர். அதிகாரிகள் இந்தியில் பேசியதால் விவசாயிகள் தங்களின் குறைகளை சரிவர கூற இயலவில்லை. எனவே, பாரபட்சமாக எடுக்கப்பட்டுள்ள பயிர் காப்பீடு கணக்கெடுப்புகளை முழு மையாக ரத்து செய்து விட்டு புதிதாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ நிறுவனம் கொடுக்க வேண்டும், கனமழையால் சேதமடை ந்த சம்பா நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : MLA ,DRP Raja ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...