அய்யம்பேட்டையில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்

பாபநாசம், ஜன. 17: அய்யம்பேட்டையில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டு–்ம் என பாமக வலியுறுத்தி உள்ளது, பாபநாசம் அருகே அய்யம் பேட்டையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு உழவர் பேரியக்க மாவட்டச் செயலர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். முன்னதாக நகரச் செயலர் முரளி தரன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் துணைப் பொதுச் செயலர் அய்யப்பன், தலைமை நிலையச் செயலர் கோதை கேசவன், மாநில துணைப் பொதுச் செயலர் வெங்கட்ராமன், மாவட்ட செயலர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அய்யம்பேட்டை பேரூராட்சி, சுற்றுப் புற கிராமங்களில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துத் தர வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரத் தலைவர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Related Stories:

>