×

பொன்னமராவதி பகுதியில் கோலாகலமாக நடந்த மாட்டுபொங்கல் விழா

பொன்னமராவதி, ஜன.17: பொன்னமராவதி பகுதியில் மாட்டுப்பொங்கல் விழா பல இடங்களில் நடந்தது. பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியில் உள்ள அடைக்கலம்காத்தார் கோயில், வீடுகளில் பொங்கல் கூடை வைத்தும் மற்றும் காளைகள் கட்டியும் வழிபாடு செய்தனர். அங்கிருந்து பெண்கள் பொங்கல் கூடைகள் சுமந்தும், ஆண்கள் காளைகள் பிடித்தும் கால்நடையாக மைலாப்பூர்- அஞ்சுபுளிப்பட்டி, பொத்திமலைபட்டவன்சுவாமி கோயில் திடலில் பொங்கல் வைத்து, காளைகள் மற்றும் மாடுகளை அலங்கரித்து விரட்டியும் வழிபாடு செய்தனர். இதில் மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயிகளுக்கு தேவையாக பொருட்களையும் வைத்து வழிபட்டனர்.

குழந்தைகளுக்கு கரும்பு கட்டி தொட்டில்கட்டி கோயிலைச்சுற்றி வழிபட்டனர். இதேபோல அடைக்கலம்காத்தார் கோயில், அழகியநாச்சியம்மன் கோயில் அருகில் சாத்தக்கருப்பர் கோயில், அடைக்கலம் காத்தார் கோயில் தெற்கு பகுதியில் உள்ள பெரியநாச்சி கோயில், வையாபுரியில் கைலாசபதி கோயில், பொன்.வையாபுரிபட்டியினர் மலையாண்டி கோயில் ஆகிய இடங்களுக்கு பொங்கல் கூடைகள் எடுத்துச்சென்று அங்கு பொங்கலிட்டு அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு கரும்பு, சர்க்கரைப்பொங்கல் வழங்கி மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர். இதேபோல வார்பட்டு, கல்லம்பட்டி, கேசராபட்டி, கண்டியாநத்தம் புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாட்டுப்பொங்கல் விழா நடந்தது.

Tags : festival ,Ponnamaravathi ,area ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு