×

பொதுமக்கள் மகிழ்ச்சி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

அறந்தாங்கி, ஜன.17: மணமேல்குடி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் மகள் சத்ய. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, தொடர்மழையால் சேதமடைந்திருந்த அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சத்ய உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம.எல்.ஏ, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பரணிகார்த்திகேயன், மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளர் சக்திராமசாமி ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த மாணவி சத்யயின் தந்தை உடையப்பன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து திமுக சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதிஉதவி வழங்கினர். திமுக நிர்வாகிகள் வீரையா, பிரபுராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : student ,
× RELATED திமுக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்