×

தொடர்மழையால் கறம்பக்குடி அருகே 2 வீடுகள் இடிந்து சேதம்

கறம்பக்குடி, ஜன.17: கறம்பக்குடி அருகே தொடர்மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து சேதமானது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (58), விவசாய கூலி தொழிலாளி. மழையூர் அரசு மருத்துவமனை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்றுமுன்தினம் அதிகாலை இவர் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென இவருடைய வீடு இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அதேபோல மாங்கோட்டை அருகே புதுவிடுதி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது வீடு இடிந்து சேதமாகியுள்ளது. இரண்டு வீடுகளையும் கறம்பக்குடி வருவாய் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தொடர் மழை காரணமாக வீடுகள் இடிந்து சேதமான சம்வபம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,Karambakudy ,
× RELATED கறம்பக்குடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு