×

அறந்தாங்கி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

அறந்தாங்கி, ஜன.17: அறந்தாங்கி காவல் நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி டி.எஸ்.பி ஜெயசீலன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறித்தவ மதங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் சமத்துவத்தையும், மதநல்லிணக்கத்தையும் போற்றும் விதமாக சமத்துவ பொங்கல் நடந்தது. ஏடிஎஸ்பிக்கள் கீதா, ஜெரீனா பேகம், பங்கு தந்தை ஜேம்ஸ் ராஜ், புதுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி காவல் துறை அமைச்சு பணியாளர்களுடன் இணைந்து வண்ணக்கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, கரும்புகள் வைத்து, கும்மிப்பாடல் பாடி, பச்சரிசி பொங்கல் வைத்து சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Aranthangi Police Station ,
× RELATED சமத்துவ பொங்கல் விழா