திமுக கோரிக்கை நாகை புதிய கடற்கரை வெறிச்சோடியது நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

மயிலாடுதுறை, ஜன.17: நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன் களபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. தமிழகம் முழுவதும் முன் களபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. நாகை மாவட்டத்தில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேதாரண்யம் அரசு மருத்துவமனை, வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இதேபோல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, ஆக்கூர்ஆரம்ப சுகாதார நிலையம், சீர்காழி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார். முதுநிலை மருத்துவர் ராஜசேகர் மற்றும் மருத்துவர்கள் வீரசோழன், சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மருந்தாளுநர் செல்வகுமாருக்கு முதன்முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. படிப்படியாக அனைத்துதுறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: