போலீசில் புகார் காரைக்காலில் போலீசார் வாகன சோதனை பைக் திருடன் கைது 14 டூவீலர்கள் பறிமுதல்

காரைக்கால், ஜன.17: காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் நாகையை சேர்ந்த பைக் திருடனை கைது செய்த போலீசார் மொத்தம் 14 பைக்குகளை பறிமுதல் செய்தனர். காரைக்கால் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காரைக்கால் நகர காவல் நிலைய எஸ்ஐ ராமசாமி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்கால் விக்ரம்சாரபாய் சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் நாகை சாமந்தான்பேட்டை அமிர்தாநகரை சேர்ந்த கலைவாணன் மகன் கலைகுமார் (26) என்பதும், அவர் ஓட்டி வந்த ைபக் திருட்டு பைக் என்பதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து கலைகுமாரை கைது செய்தனர்.

இவர் கடந்த டிசம்பர் மற்றும் இந்த மாதம் காரைக்கால் நேரு வீதி, பாரதி நகர் மற்றும் காரைக்கால் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் இதேபோன்று மூன்று மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. மேலும் கடந்த 2019 ஜூலை முதல் 2020 டிசம்பர் வரையிலான மாதங்களில், சென்னையில் பத்து மோட்டார் சைக்கிள்கள் அவர் திருடியதும் தெரிந்தது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், 14 பைக்குகளை (ரூ.7 லட்சம் மதிப்பு) நாகை மாவட்டம் சமந்தன்பேட்டை அமிர்தாநகரில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையில் பைக் திருடனை பிடித்து கைது ெசய்து, 14 பைக்குகளை பறிமுதல் செய்ததில் விரைந்து செயல்பட்ட நகர காவல்நிலைய காவலர்கள் மற்றும் எஸ்டிஎப் காவலர்களை காரைக்கால் முதல்நிலை கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Related Stories:

>