பிப்.15ம் தேதி கடைசி பிரதான வாய்க்கால்- வெள்ளியணை பெரியகுளம் வரை தூர் வார வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை

கரூர், ஜன. 17: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளியணை (தெற்கு) மேட்டுப்பட்டி பசுமை புரட்சி விவசாயிகள் சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: வெள்ளிணை ஊராட்சி தென்பாகம் பகுதியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டு, அணையில் இருந்து வலது பிரதான கால்வாய் வெட்டப்பட்டு 54கிமீ தூரம் வந்து, வெள்ளியணை பெரியகுளத்துக்கு தண்ணீர் வர அரசாணை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அணைக்கு தண்ணீர் வராத காரணத்தினால் வலது பிரதான கால்வாய் மிகவும் மோசமாக சீமை கருவேல் மற்றும் புதர் மண்டி தண்ணீர் வரும் தடம் தெரியாமல் உள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் குடகனாறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையும் நிரம்ப வாய்ப்புள்ளது.அணை நிரம்பும்பட்சத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் வலது பிரதான வாய்க்கால் ஆரம்பம் முதல் வெள்ளியணை பெரியகுளம் வரை உடனடியாக தூர் வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: