பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் கரூர் காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

கரூர், ஜன. 17: கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சாலையோரம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் (கரூர்-திருச்சி சாலை) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இரண்டாமாண்டு மாணவர்களும் தற்போது கல்லூரியில் பயின்று வருகின்றனர். கரூர்-திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதிச் சாலையில் இடதுபுறம் வழியாக இந்த கல்லூரிக்கு செல்ல வேண்டும். காந்திகிராமம் பகுதியில் கல்லூரிக்கு செல்லும் வழி என அனைத்து தரப்பினர்களும் தெரிந்து கொள் ளும் வகையில் விளம்பர பலகை அமைக்கப்பட வில்லை. இதனால் வெளிமாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் வரும் பொதுமக்கள் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வழி தெரியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவ்வப்போது நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் தடுமாறி வருவதாகவும் கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் அளவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த பகுதிக்கு எளிதாக செல்லும் வகையில் தேவையான அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட சாலைகளில் வைக்க அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>