பொதுமக்கள் எதிர்பார்ப்பு பெண், குழந்தைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, ஜன.17: அரவக்குறிச்சியில் திருச்சி சரக காவல்துறை சார்பில், சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பது குறித்த கேடயம் எனும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுவர் மீதான பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், சிறுவர் கொத்தடிமை மற்றும் பிச்சை எடுத்தல், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல், பெண் கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான வன்முறையற்ற சமுதாயம் உருவாக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பெண்கள் தொடர்பான பாதுகாப்பு கருத்துக்களை வலியுறுத்தி கலைக் குழுவினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரம் செய்தனர்.  மேலும் திருச்சி சரக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 9384501999, 6383071800 என்ற இரு சிறப்பு தொலைபேசி எண்களை மக்களிடையே அறிமுகப்படுத்தினர்.நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எஸ்.ஐ.,சரவணன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சுமித்திரா, கேடயம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், ராஜசேகர் மற்றும் முகவரி கலைக்குழுவினர் பங்கேற்றனர்.

Related Stories:

>