லிப்ட் கேட்பது போல் நடித்து மாணவியிடம் செயின் பறிப்பு பெண் உள்பட மூவருக்கு வலை

கரூர், ஜன. 17:  கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ருதி நிவேதா (21). அரசு கல்லூரி முதலாமாண்டு மாணவி. இவர், கடந்த 12ம்தேதி மாலை பைக்கில் வீட்டிலிருந்து கரூர் சென்றார். அப்போது, பைக்கை இடைமறித்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், மாணவியிடம் லிப்ட் கேட்டுள்ளார். இவரும் லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்றார். இவர்கள் சென்ற பைக், வெங்கமேடு மேம்பாலம் அருகே சென்றபோது, பைக்கில் இருந்து இறங்கிய அந்த அடையாளம் தெரியாத பெண், அங்கு வந்த மூன்று நபர்களின் உதவியுடன் கல்லூரி மாணவியிடம் இருந்து 3 பவுன் செயின், வெள்ளி காப்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>