தோகைமலை பகுதியில் களையிழந்த பொங்கல் விழா

தோகைமலை, ஜன.17: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தொடர் மழைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் உள்பட பல்வேறு பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர். இதனை அடுத்து பெரும்பாலான விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை கைவிட்டனர். இருந்த போதும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை கோயில்களில் கொண்டாடினர். தை பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகளை சொற்ப அளவில் கொண்டாடினர். இதேபோல் ஆர்டி.மலை விராச்சிலேஸ்வரர் கோயிலில் தைமாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Related Stories:

>