சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 17: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கரூர் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சிங்கராயர் வரவேற்றார். தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மகாவிஷ்ணன் ஆகியோர் பேசினர். மாநில தணிக்கையாளர் கண்ணதாசன் நிறைவுரையாற்றினார். பொருளாளர் வெங்கடேஷ்வரன் நன்றி கூறினார். சாலைப்பணியாளர்களின் 2002ம் ஆண்டு முதல் 2006ம்ஆண்டு வரை உள்ள 41 மாத பணி நீக்க காலத்தை பணிஓய்வுக்கு பின்பு பணி கொடைக்கும், ஒய்வூதிய பலன்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள மாநில சாலைகள், மாவட்ட சாலைகள், மாவட்ட இதர சாலைகள் பேக்கேஜ் முறையிலும், பிபிஎம்சி திட்டத்தின் மூலம் தனியாருக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: