திருச்சுழி பகுதியில் மழையில் பாதித்த பயிர்கள் ஆய்வு

திருச்சுழி, ஜன. 17:  திருச்சுழி ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி நிலங்களில் உளுந்து, மல்லி, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டை பயிரிலே முளைக்க ஆரம்பித்து விட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக நேற்று தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தாசில்தார், பயிர்கள் சேதம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் கூறி சென்றார்.

Related Stories: