10 மாதங்களுக்கு பின் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசி, ஜன. 17:  சிவகாசி நகரின் மைய பகுதியில் நகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. 164 கடைகள் கொண்ட இந்த மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இதனால் காரனேசன் ஜங்ஷன், உழவர் சந்தை, பஸ்ஸ்டாண்டு, வெம்பக்கோட்டை சாலை, திருவில்லிபுத்தூர் சாலைகளில் காய்கறி கடைகள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன.  நாளடைவில் பஸ்ஸ்டாண்டு, வெம்பக்கோட்டை சாலை, திருவில்லிபுத்தூர் இரட்டை பாலம் பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக காரனேசன் காலனி, உழவர் சந்தையில் மட்டும் கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நலன்கருதி மார்க்கெடடை திறக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வியாபாரிகள் மனு கொடுத்தனர்.  இந்நிலையில் நேற்று முதல் அண்ணா காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது.  இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொங்கல் விடுமுறை என்பதால், 60க்கும் குறைவான கடைகள் மட்டும் திறந்திருந்ததால் பொதுமக்களின் வரத்து குறைவாகவே இருந்தது.

Related Stories: