அனைத்து சிக்கலையும் தீர்க்க கல்வியால் மட்டுமே முடியும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

காரைக்குடி, ஜன. 17:  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா, திருவள்ளுவர் விழா மற்றும் ஆசிரியர்கள் தினவிழா என முப்பெரும் விழா நடந்தது. பதிவாளர் வசீகரன் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், `வள்ளுவம் என்ற தலைப்பில் தமிழில் எழுத்தப்பட்ட நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கருத்துச்செறிவு நிறைந்த கலாச்சார பதிவுகளை கொண்ட இந்நூலை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது’ என்றார். விழாவை துவக்கிவைத்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், `தமிழர்களின் பண்பாடு, அடையாளத்தை பறைசாற்றும் விழா பொங்கல், உலகை அச்சறுத்தும் தீய கிருமி உள்பட அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி’ என்றார்.

கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்று வரும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. ரூசா திட்டத்தின் கீழ் ஆய்வுத்திட்டங்கள் மேற்கொண்டு தரமான கற்றல் மற்றும் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்கலைக்கழகத்தின் எச் குறியீட்டை 84 ஆக உயர்த்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்று வழங்கப்பட்டது. தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு கவிதை, கட்டுரை, பேச்சு, கோலம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் குருமூர்த்தி, கருத்தபாண்டியன், உதவித் தொழில்நுட்ப அலுவலர் கருணாநிதி ஆகியோர் பேசினர்.

Related Stories: