ராமநாதபுரத்தில் களைகட்டும் போலி கருப்பட்டி விற்பனை பனைத் தொழிலாளர்கள் பாதிப்பு

கீழக்கரை, ஜன.17: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போலி கருப்பட்டிகளை சிலர் விற்பதால், பதனீரில் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கு சீசன் நேரத்தில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக சாயல்குடி பனைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள், வெளியூர் நபர்களை கவரும் வகையில் சுற்றுலா இடங்கள், பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் இடங்களில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை ஓலைப்பெட்டியில் வைத்து விற்கின்றனர்.இதில் சிலர் அதிக லாபம் நோக்கத்துடன் பதனீரில் கரும்புசர்க்கரை (சீனியை), ரசாயனம் கலந்த பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதுடன், பாரம்பரியமுறையில் பதனீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் பனை தொழிலாளர் விற்பனை பாதிக்கப்படுகிறதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: