×

சின்னாண்டிவலசையில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை

ராமநாதபுரம், ஜன.17: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டிவலசை ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஒப்புதலோடு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகேஸ்வரன் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடந்தது. மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு பேசினார். மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் புல்லாணி, மாவட்ட துணைச்செயலாளர் சங்கு முத்துராமலிங்கம்  முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அதிமுக ஆட்சியால் தாங்கள் படும் அல்லல்களையும், அவலங்களையும் கிராமமக்கள் எடுத்துரைத்தனர். அவர்களின் குறைகளை மனுவாக பெற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அப்போது 15க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Tags : Village Council ,Chinnandivalasa ,DMK ,
× RELATED திமுக மக்கள் கிராமசபை கூட்டம்