×

மழைநீரில் மிதக்கும் அப்துல்கலாம் நகர்


கீழக்கரை, ஜன.17. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வண்ணாங்குண்டு ஊராட்சியில் உள்ள அப்துல்கலாம் நகரில் 5 அடி அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இப்பகுதியே தீவு போல்  காட்சியளிக்கிறது. தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் அதிக அளவு உள்ளதாலும், தொடர்ந்து தண்ணீருக்கு மத்தியில் வாழ்வதால் சேற்றுப்புண், காய்ச்சல், தொற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்புசெட் மூலமாகவோ அல்லது மாறுகால் மூலமாகவோ  வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Abdulkalam Nagar ,
× RELATED சென்னையில் கலப்பு ஹாக்கி: ஹரிதாஸ் அணி கோல் மழை