×

கமுதி அருகே மழையால் வீணான சோளப்பயிர்களுடன் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

கமுதி, ஜன. 17: கமுதி அருகே தொடர் மழையால் வீணாகிய சோளப் பயிர்களை கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலாங்குளம், ஆரைகுடி கோவிலாங்குளம்பட்டி, கண்மாய்பட்டி, நெறிஞ்சுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்கள் ஏராளமானோர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்துள்ளனர். நெல் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல், சோளம் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல், கேழ்வரகு 1000 ஏக்கருக்கு மேல், கம்பு, 1000 ஏக்கருக்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மீண்டும் முளைத்து முற்றிலும் வீணாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு  இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று, நேற்று கோவிலாங்குளம்பட்டியில் வீணாகிப் போன சோளப்பயிர்களைை கையில் வைத்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். தகுந்த நிவாரணம் அரசு அளிக்கவில்லை என்றால், மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : Women ,Kamuti ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது