மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி மையம் 2 இடங்களில் அமையவுள்ளது மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்

திருப்பரங்குன்றம், ஜன. 17:  மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி மையம் திருமங்கலம், திருப்பரங்குன்றத்தில் அமையவுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘செப்டம்பர் மாதம் கேள்வி நேரத்தின் போது பாராளுமன்றத்தில் மதுரை மல்லிகை பூ தொழிலை மேம்படுத்தும் விதமாக திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மல்லிகை ஏற்றுமதி மையம் அமைக்க வலியுறுத்தினேன். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடிதத்தில் மதுரை மல்லிகையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதனை உலகளாவில் கொண்டு செல்ல வசதியாகவும், விற்பனையை மேற்படுத்தவும் மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து மல்லிகை ஏற்றுமதி மையம் அமைக்க திட்ட வகுக்கப்படும் எனவும், இத்திட்டத்தை மத்திய அரசின் வேளாண் விளைபொருள்- உணவு ஏற்றுமதி முகமை (அபேடா) மூலம் கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தி அதிகரிக்கவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கும். இதேபோல் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருவேன்’ என்றார்.

எது உண்மை, எது பொய் அவருக்கு தெரியும்

ராகுல் காந்தி மதுரை வருகை அரசியல் உள்நோக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்த கேள்விக்கு, மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‘அவருக்கு தெரியும் எது உண்மை, எது பொய் என்று. ராகுல் காந்தி வந்தது தமிழர்களின் பெருமையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ளத்தான். இதனை தெரியாமல் அதிமுகவினர், பாஜகவினர் செயல்படுவது வேடிக்கையானது’ என்றார்.

Related Stories: