மீனாட்சியம்மன் கோயிலில் முதல்வர் சுவாமி தரிசனம்

மதுரை, ஜன. 17: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியையும், தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கினார். பின்னர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பகல் 12 மணியளவில் வந்தார். முதல்வரை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை வரவேற்றனர். இதையடுத்து அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் விபூதி விநாயகரை முதல்வர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார். பட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் முக்குறுணி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரை தரிசனம் செய்து விட்டு, பகல் 12.20 மணிக்கு வெளியில் வந்தார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் வருகையை ஒட்டி அப்பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>