×

35 பேருக்கு கொரானா தடுப்பூசி

வத்தலக்குண்டு, ஜன. 17: நிலக்கோட்டை மருத்துவ வட்டாரத்தில் அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவர் வேதா தலைமை வகித்தார். முதல் தடுப்பூசி வட்டார சுகாதார ஆய்வாளர் வேல்முருகனுக்கு செலுத்தப்பட்டது, முன்னதாக அவருக்கு உடல் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்த பிறகு தடுப்பு ஊசி போடப்பட்டது.
பின்னர், அவருக்கு ஏதேனும் அறிகுறி உள்ளதா என பரிசோதித்த பின், அவரை அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள முன்களபணியாளர்கள் உள்பட மொத்தம் 35 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags : Corona ,
× RELATED கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை