×

வாலிபர் தீக்குளித்து சாவு

ஒட்டன்சத்திரம், ஜன. 17: ஒட்டன்சத்திரத்தை அடுத்த புதுகாளாஞ்சி பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் காளிமுத்து (29). இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால், விரக்தியடைந்த காளிமுத்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காளிமுத்து உயிரிழந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளி தீக்குளித்து சாவு