தேனி, மதுரை மாவட்டங்களில் நடக்கும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை சிறப்பான வரவேற்பு அளிக்க திண்டுக்கல் மாவட்ட திமுக முடிவு

திண்டுக்கல், ஜன. 17: திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ள ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ மக்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதையொட்டி அய்யலூர், தங்கம்மாபட்டி, டோல்கேட் அருகில் வருகிற ஜன.19ம் தேதி செவ்வாய்கிழமை, மாலை சரியாக 4.30 மணியளவில் கழக துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்எல்ஏ தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அது சமயம், திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணி அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>