காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்: மாவட்ட தலைவர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி, செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி தலைமையில் பாஜக அரசின் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளின் விரோத 3 கருப்பு சட்டங்களை எதிர்த்தும் நாளை (18ம் தேதி) காலை 10 மணியளவில்  சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், அதனை அடுத்து ஆளுநர் மாளிகை முற்றுகையும், நடைபெறுகிறது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, வட்ட, பேரூர், வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories:

>