குளவி கொட்டி 15 பேர் காயம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 நபர்கள் நேற்று காலை ஒரு வேனில் ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி அருகே உள்ள கூடியம் மலைப்பகுதியில் உள்ள மண்ணாச்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். அப்போது முன்னதாக பொங்கல் வைக்க அடுப்பு பற்ற வைத்து தீ மூட்டினர். அதில் இருந்து எழுந்த புகையால் அங்குள்ள மலைத்தேனில் இருந்த குளவிகள் பறந்து வந்து அவர்களை கொட்டியது. இதில் சத்தம் போட்ட 15 பேரையும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அருகேவுள்ள கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கு குளவி கடித்த விஷ முறிவுக்கு மருந்து இல்லை என்பதால் அங்கிருந்து 15 பேரையும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories:

>