சென்னை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி அளித்துள்ளார். தீபம் எங்கே ஏற்றுவது என்பதை கோயில் நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும். திருப்பரங்குன்றம் நில அளவை தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. கோயில் நிர்வாகம் தவிர்த்து வேறு யாரும் தீபம் ஏற்ற உரிமை இல்லை. 2021-ல் திருப்பதி கோயில் வழக்கில் தேவஸ்தானம்தான் முடிவுகளை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என தெரிவித்தார்.
