திருப்போரூர் கோயில் குளத்தில் ஆண் சடலம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஏரி மற்றும் கோயில் குளத்தில் மூழ்கி 2 பேர் பலியாயினர். இச்சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை குரோம்பேட்டை காந்திநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு (51). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் டில்லிபாபு, குடும்பத்துடன் திருப்போரூர் அருகே கொண்டங்கி கிராமத்துக்கு சென்றார். அங்கு அனைவரும், ஏரியில் இருந்து வெறியேறும் வெள்ளநீரில் குளித்து மகிழ்ந்தனர்.

அப்போது, டில்லிபாபு மட்டும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். அதில், திடீரென அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த மனைவி மற்றும் மகள்கள் அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய டில்லிபாபுவை சடலமாக மீட்டனர். ஸ்ரீ திருப்போரூர் கந்தசாமி கோயிலை கட்டிய சிதம்பர சுவாமிகளுக்கு தனியாக மடம் உள்ளது. இந்த மடத்தையொட்டி வேலாயுத தீர்த்தம் எனும் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று காலை 6 மணியளவில் துணி துவைக்க சிலர் சென்றனர்.

அப்போது அங்கு, தண்ணீரில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகலறிந்து திருபோரூர் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. குளக்கரையில் ஒரு ஜோடி செருப்பு, லூங்கி, 2 சட்டைகள் கிடந்தன. இதையடுத்து போலீசார், மேற்கண்ட 2 சடலங்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>