சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 376 நில அளவர்கள், 100 வரைவாளர் பணியிடங்களில் தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42 பேருக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
