காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல்விழா நேற்று நடந்தது. இதனை, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. கிராமிய கலைக் குழுவினரின் சிலம்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த விழாவில், பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் கிராமிய மனம் வீசும் மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் கோலப் போட்டிகள் நடத்தி, அதில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில், சிறப்பு விருந்தினராக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு, பானையில் பொங்கல் வைத்து, கலைக் குழுவினரின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம், காஞ்சிபுரம் தாசில்தார் பவானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: