கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் திரளாக பங்கேற்க செல்வகணபதி அழைப்பு

சேலம், ஜன.17: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகமெங்கும் அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில், பல்லாயிரக்கணக்கான இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்டறிந்து, எழுச்சியுரையாற்றி வருகிறார். அதன்படி, சேலம் மேற்கு மாவட்டம், இடைப்பாடி தொகுதி, கொங்கணபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, குரும்பப்பட்டி மகா முனியப்பன் கோவில் எதிரில் உள்ள திடலில் நாளை (18ம்தேதி) மாலை சுமார் 2.30  மணியளவில்  நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.இதில் பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள், குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் முழு முயற்சியோடு பணியாற்ற வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>