பொங்கல் விழாவில் 1700 பேருக்கு நலஉதவி

சேலம், ஜன.17:  மெய்யனூர் பகுதி திமுக சார்பில் நடந்த பொங்கல் விழாவில், 1700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை, செயலாளர் சக்கரை சரவணன் வழங்கினார். பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி சமத்துவ பொங்கல் விழா, மெய்யனூர் பகுதியில் நடந்தது. முன்னாள் மண்டல குழு தலைவரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான சக்கரை சரவணன் தலைமையில் 6 இடங்களில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. 18வது வார்டு, 2வது வார்டு, 19வது வார்டு, 23வது வார்டு, 24வது வார்டுகளில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, மாவட்ட பிரதிநிதி நவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 1200 ஏழை எளியோருக்கு சேலை, 150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, கரும்பு, சர்க்கரை பொங்கல், கட்சி நிர்வாகிகள் 250 பேருக்கு வேட்டி, சட்டை, துண்டு, பள்ளி மாணவமாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் என நலத்திட்ட உதவிகளை செயலாளர் சக்கரை சரவணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் பாலசந்தர், செட்டி(எ)சுப்பிரமணி, குமார், திருமலை, கருணாநிதி, பாலகிருஷ்ணன், பாண்டியன், ராஜன்பாபு, சீனிவாசன், அழகேசன், பாலதண்டாயுதம், அன்பழகன், ராமசாமி, அறிவழகன், முருகன், சுரேஷ், கவுதம், கலைஞர் தம்பிதுரை, சாந்தி, ரங்கநாதன், சங்கர், ஆனந்த், சீனிவாசன், சந்தோஷ்குமார், குமார், மகேஷ்குமார், ஜெயசீனிவாசன், பாலசுப்பிரமணியம், கார்த்திகேன், குட்டி(எ) அய்யனார், மாதேஷ்வரன், சஞ்சய் சக்கரவர்த்தி, சரவணன், மணிகண்டன், தாமோதரன், யாசர் உசேன், வினோத்குமார், ஜம்புலிங்கம், பரத் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>