எருதாட்டம் கோலாகலம்

இடைப்பாடி, ஜன.17:  உழவர் திருநாளையொட்டி, இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோயிலில் எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதியை சேர்ந்த காளைகளை அய்யனாரப்பன் கோயில் பூசாரியின் திருநீர் இட்டு கோயிலை சுற்றி வருவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றால் வருவாய்,  போலீசார் தடை விதித்தனர். இது குறித்து பொதுமக்கள் முற்றுகை இட்டதால், வழக்கம்போல காளைகள்  அந்தந்த பகுதிகளில் கோயிலைச் சுற்றி, கூட்டம் சேராமல் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காளைகளுக்கு நேற்று திருநீர் இட்டு, இளைஞர்கள் இருபுறமும் கயிறுகளை பிடித்துக் கொள்ள காளைகள் கோயிலை சுற்றி வந்தவுடன், அந்த  பகுதி கிராமங்களுக்கு வீடுகளுக்கு காளைகள்  கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து எருதாட்டம் நடந்தது.

Related Stories:

>